சென்னை: ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சவுத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்ரமணியம் சிவா, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘டிஎன்ஏ’. பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீன் சைவி, சத்யபிரகாஷ் மற்றும் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர், ஜிப்ரான் வைபோதா பின்னணி இசையமைத்துள்ளார்.

கார்த்திக் நேதா, முத்தமிழ், உமாதேவி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இதை வரும் 20-ம் தேதி வெளியிடுகிறது. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜு முருகன், கணேஷ் கே. பாபு, ஹேமந்த் ஆகியோருடன், கவிஞர் வெண்ணிலாவின் மகள்கள், மத்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற கவின்மொழி மற்றும் நிலா பாரதி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிமிஷா சஜயன் பேசுகையில், ‘இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். டி.என்.ஏ என்பது திவ்யா மற்றும் ஆனந்தின் கதாபாத்திரங்கள். திவ்யாவாக நடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதர்வா தனது நடிப்பால் திரையில் மாயாஜாலத்தை படைத்துள்ளார்’ என்றார்.