கேரளா: சர்வம் மாயா திரைப்படம் ரூ.125 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் என்று தெரியுங்களா?
மலையாள நடிகர் நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் அஜு வர்கீஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
நீண்ட காலமாக வெற்றிப்படம் இல்லாமல் ஏமாற்றத்துடன் இருந்த நிவின் பாலிக்கு கம்பேக்-ஆக சர்வம் மாயா திரைப்படம் அமைந்துள்ளது. நிவின் நடிப்பில் உருவாகியுள்ள டியர் ஸ்டூடன்ட்ஸ், பென்ஸ் ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன.
இந்தப் படம் பிப்ரவரிக்கு முன்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகுமென தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.