சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார். இது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:- இனிமேல், நான் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்தப் பெயர் இனி எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் திரைப்படத் துறை கனவுகளையும் முன்னெடுத்துச் செல்லும்.
எனவே இனி யாரும் என்னை ஜெயம் ரவி என்று அழைக்கக்கூடாது. திரைப்படத் துறையின் மீதுள்ள எனது அபரிமிதமான அன்பின் காரணமாக, ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். இதில், திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவேன்.
அதேபோல், சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய எனது ரசிகர் மன்றத்தை ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக மாற்றுகிறேன். எனது புதிய தொடக்கத்திற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.