சென்னை: இன்றைய காதலை சொல்லும் படமாக உருவாகி உள்ளது ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயம்யம் ரவி, நித்யாமேனன், யோகி பாபு, வினய், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் 14-ம் தேதி வெளியாகிறது.
படத்தை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி கூறும்போது, “இது ரொமான்ஸ் கதைதான். இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படம் இது. காதலில் இருக்கும் எமோஷன், புரிந்து கொள்ளாத தன்மை, சண்டை, பிரேக் அப் எல்லாமே இருக்கும். முன்பு, காதலித்தால் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் திருமணம் செய்துகொண்டு வாழ்வார்கள். இன்று அப்படியில்லை. எளிதாக பிரிகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை இந்தப் படம் பேசும்.
‘ஓகே கண்மணி’ படத்தின் அடுத்த கட்டமாக இந்தப் படம் இருக்கும். காதல் உணர்வு எப்போதும் ஒன்றுதான். எதிர்பார்ப்பு எப்படி மாறியிருக்கிறது என்பதையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இதில் மெசேஜ் ஏதும் இல்லை. ஜெயம் ரவி – நித்யா மேனன் ஜோடி புதிதாக இருக்கும்” என்றார்.