நயன்தாராவின் ஆவணப்படம் கடந்த நவம்பரில் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியானது. அதில், நயன்தாரா தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் திருமணம் வரையிலான விஷயங்களைப் பேசினார். அதில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ பயன்படுத்தப்பட்டது.
படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வழக்கு தொடுத்ததால் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் நயன்தாராவுக்கு ரூ.1 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு செய்திகள் வெளியாயின.
தற்போது ‘சந்திரமுகி’ படத்தின் உரிமையை வைத்திருக்கும் ஏபி பிலிம்ஸ் நிறுவனம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரமுகி படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சில வீடியோக்களை பயன்படுத்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.