முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டு தனக்கு பிடித்த பாடல்கள், 10 புத்தகங்கள் மற்றும் 10 திரைப்படங்களை பட்டியலிட்டுள்ளார். அவரது படங்களின் பட்டியலில் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ என்ற இந்தியப் படம் முதலிடத்தில் உள்ளது.
பாயல் கபாடியா இயக்கிய இப்படத்தில் கனி குஷ்ருதி, திவ்யா பிரபா, ஹிருது ஹாரூன் மற்றும் சாயா கதம் ஆகியோர் நடித்துள்ளனர். கேரளாவில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த இரண்டு செவிலியர்களின் கதைதான் படம். கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் வென்ற இப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.