‘குபேரா’ திரைப்படம் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ஃப், தலிப் தாஹில் மற்றும் பலர் நடித்துள்ள படம். சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஜூன் 20-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில், படத்தின் வெளியீடு தாமதமானால் செலுத்தப்பட்ட தொகையைக் குறைப்பதாக பிரைம் வீடியோ மிரட்டியதாக தயாரிப்பாளர் சுனில் நரங் கூறியுள்ளார். “போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்காக, ஜூலை மாதம் படத்தை வெளியிடலாம் என்று ஓடிடி நிறுவனத்திடம் சொன்னேன்.
அவர்கள், ‘ஒப்பந்தத்தின்படி, படத்தை ஜூன் 20-ம் தேதி வெளியிட வேண்டும். இல்லையென்றால், ஒப்பந்தத் தொகையை ரூ. 10 கோடி குறைப்போம்’ என்றார்கள். வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யும் அதிகாரத்திற்கு அவர்கள் வந்துவிட்டார்கள். இப்போது எல்லாம் அவர்களின் விருப்பப்படி நடக்கிறது,” என்று அவர் கூறினார்.