
அடல்ட் காமெடி வகையை சேர்ந்த ‘பெருசு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கோ ராம் இயக்கத்தில், வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் போன்றவர்கள் நடித்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர்.
இந்த படம் கடந்த மார்ச் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானபோது, அதன் நகைச்சுவை காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியன.

இப்போது, இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட உள்ளது. இதன் இந்தி ரீமேக் உரிமைகள் விற்கப்பட்டதால், இந்தியில் படம் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.