2022 ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. இந்த படத்தை இயக்கிய பாண்டிராஜ், முன்பு சூர்யாவின் குடும்பத்தினருக்கான வெற்றிப்படங்களை உருவாக்கியவர் என்பதால், இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பு தனியே இருந்தது. ஆனால் படம் வெளியானதும், விமர்சனங்கள் எதிர்மறையாகவே இருந்தன. இதன் விளைவாக படம் எதிர்பார்த்த வருமானத்தை எட்டவில்லை. ஆனால், அதன் பிறகு வெளியான சூர்யாவின் மற்ற படங்கள் இதற்கும் இணையாக வசூலிக்கவில்லை என இயக்குநர் பாண்டிராஜ் நேரடியாக கூறியுள்ளார்.

சமீபத்திய ஒரு பேட்டியில், “எதற்கும் துணிந்தவன் தயாரிப்பாளருக்கும், ஹீரோவுக்கும் சந்தோஷத்தை அளித்தது. படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றாலும், அதன் வசூலை சூர்யாவின் அடுத்தடுத்த படங்களான கங்குவா மற்றும் ரெட்ரோ தாண்டவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில், அந்த படம் flop-ஆ இல்லையா? அல்லது underrated hit-ஆ என்ற விவாதம் எழுந்துள்ளது. பாண்டிராஜ் மேலும், “நாங்கள் கார்த்திக்கு பெரிய ஹிட் கொடுத்தோம் என்பதாலேயே சூர்யாவிற்கும் அதைவிட பெரிய வெற்றியை தரவேண்டும் என்பதே எனது நோக்கம். கொரோனா சூழ்நிலையில் உயிரை பணயம் வைத்து உழைத்தோம்” என்றார்.
‘கங்குவா’ படம், எதிர்பார்ப்புக்கு மாறாக கடுமையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்தது. ‘ரெட்ரோ’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், அது பெரிய ஹிட் இல்லை. ஆனால் வசூல் பட்டியலில் ‘எதற்கும் துணிந்தவன்’-ஐ அவை முந்தவில்லை என பாண்டிராஜ் கூறியிருக்கிறார். இதனை அடிப்படையாக வைத்தே ரசிகர்கள், “அப்போ எதற்கும் துணிந்தவன் வெற்றி படம்தானே?” என கேள்வி எழுப்புகின்றனர்.
2025 ஆம் ஆண்டுக்கான ஹைஎஸ்ட் காஸிங் திரைப்படங்களில் ‘ரெட்ரோ’ இடம் பிடித்துள்ள நிலையில், அதைவிட ‘எதற்கும் துணிந்தவன்’ வசூலித்திருப்பதாக தகவல் வந்துள்ளதே ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பாண்டிராஜ் கூறிய இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சூர்யா, பாண்டிராஜ் கூட்டணியின் எதிர்கால முயற்சிகள் எப்படியிருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.