சமீபகாலமாக மலையாளத்தில் வெளியாகும் பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் மலையாளப் படம் ‘குருவாயூர் அம்பலநடையில்’.
வினு (பசில் ஜோசப்) துபாயில் பணிபுரியும் ஒரு கேரள இளைஞர். இந்தியாவில் இருக்கும் ஆனந்தன் (பிரித்வி ராஜ்) வினுவுடன் நட்பு கொள்கிறார், ஆனந்தன் தனது தங்கையான அஞ்சலியை வினுவுக்கு திருமணம் செய்ய விரும்புகிறார். வினு கல்லூரியில் படிக்கும் போது பார்வதி என்ற பெண்ணை காதலித்து வந்தார், அப்போது தான் அந்த காதல் முறிவின் விரக்தியில் இருந்து வெளியே வந்திருப்பார். அதேபோல், ஆனந்த் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து வாழும் போது, வினு துபாயில் இருந்தபடி அவர்களை ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறார்.
திருமணத்திற்காக வினு துபாயிலிருந்து திரும்பும் போது, வினுவின் முன்னாள் காதலியான பார்வதி ஆனந்தின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. ஆனால் ஆனந்த் மீது பாசம் கொண்ட வினு இந்த உண்மைகளை சொல்லாமல் எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று பல முயற்சிகளை எடுக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அவர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையில் ஆனந்தனின் தங்கை அஞ்சலி வினுவை காதலிக்க ஆரம்பித்தார்.
இருவரும் காதலித்து திருமணத்திற்கு தயாராகும் நிலையில், திருமணத்தை நடத்த வினு கடந்த காலத்தில் செய்த தவறுகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வருகிறது. ஆனந்துக்கும் வினுவைப் பற்றிய உண்மை தெரிய வருகிறது. இந்த சங்கிலிகளில் இருந்து தப்பிய வினு அஞ்சலியைக் கரம் பிடித்தாரா என்ற நகைச்சுவை கதையை விபின் தாஸ் கூறியுள்ளார். முன்னதாக இவர் இயக்கிய ‘ஜெய ஜெய ஜெய ஹை’ திரைப்படமும் நகைச்சுவைப் படமாக மாபெரும் வெற்றி பெற்றது.
பிருத்விராஜ் மற்றும் பாசில் ஜோசப் இருவரும் மாமனாகவும், மச்சானாகவும், ஒருவரையொருவர் எதிரிகளாக அடித்துக்கொண்டும் நகைச்சுவையைத் தூவி இருக்கிறார்கள். பார்வதி கேரக்டரில் வரும் நிகிலா விமல் டயலாக்குகள் அதிகம் இல்லாவிட்டாலும், முகபாவங்களோடு எளிதாகப் பேசுகிறார். இப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.