நடிகை ஓவியா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கரூரில் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று அவர் ஸ்டோரி போட்டிருந்தார். அதை சில மணி நேரத்தில் நீக்கியாலும், ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைரலாக்கினர்.
இதன் பின்னர் விஜய் ரசிகர்கள் ஓவியாவை தகாத வார்த்தைகளில் விமர்சிக்க தொடங்கினர். அதற்கான ஸ்கிரீன்ஷாட்களையும் ஓவியா தன்னுடைய ஸ்டோரியில் பகிர்ந்து, “ஒரு பெண்ணை இப்படித்தான் விமர்சிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவரது ஆதரவாளர்கள், “ஓவியா மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக சைபர் பிரிவில் புகார் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

அதற்கிடையில், ஓவியா திடீரென ஒரு அணிலின் புகைப்படத்துடன் “அணிலின் புது டயட் தெரியுமா? அது வெறும் நட்ஸ் தான்” என்ற வாசகத்தையும் ஸ்டோரி வெளியிட்டார். இந்த பதிவை பலரும் விஜய் ரசிகர்களுக்கான பரிகாசமாகவே எடுத்துள்ளனர். “தலைவி கொடுக்கும் ஒவ்வொரு அடியும் இடி மாதிரி தான்” என்கிறார்கள் ஓவியா ஆர்மி.
பிக் பாஸ் சீசன் 1 மூலம் உருவான ஓவியா ஆர்மி இன்னும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளது. ஓவியாவின் அணில் ஸ்டோரி பிறகு, “அவர் ஒருபோதும் பின்வாங்க மாட்டார், இனி பதிலடி தொடர்ந்து வரும்” என்று ரசிகர்கள் பெருமையாகக் கூறுகின்றனர். இந்நிலையில், ஓவியாவின் இந்த நடவடிக்கை அரசியல் – சினிமா உலக கலவையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.