சென்னை: ஒரு நொடி படத்தின் ஹீரோவின் அடுத்த படமாக பார்க் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் ‘பார்க்’ என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார் .இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர். அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் E.நடராஜ் பார்க் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகனாக சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒரு நொடி’ படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார். பிரதான வில்லனாக யோகிராம் நடித்துள்ளார்.கதாநாயகியின் தந்தையாகத் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ் நடித்துள்ளார்.இவர்களைத் தவிர காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடந்துள்ளது.