ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ படத்தில் நடிகர் சூர்யா தனது நடிப்பை முடித்துவிட்டார். த்ரிஷா, சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடிக்கிறார்.
‘விடுதலை’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த பவானிஸ்ரீ இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.