ஹைதராபாத்: நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா, கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயமாக்கப்பட்டு, டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளனர். இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றன. நாக சைதன்யா, சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்றார். அதேபோல், சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது, நாகர்ஜுனா குடும்பம் இந்த புதிய திருமணத்தை பல மடங்கு பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது.
திருமணத்தின் முன் நிகழ்வுகளாக, கடந்த சில நாட்களாக ஹல்தி சடங்கு மற்றும் பிற மரபுவழி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளுக்கான புகைப்படங்களை சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, தனது பாட்டி மற்றும் தாயாரின் பாரம்பரிய நகைகளை அணிந்து ஹல்தி சடங்கில் கலந்த சோபிதா, அருமையான கவர்ச்சியில் திகழ்ந்துள்ளார்.
சோபிதா துலிபாலா, 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றவர். அதன் பிறகு, மாடலிங் மற்றும் சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றவர். “பொன்னியின் செல்வன்” படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். திருமணத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹல்தி சடங்கின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இவர்களது திருமணத்திற்கு நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா, 2.5 கோடி மதிப்பில் லெக்சஸ் காரை பரிசாக கொடுக்க வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம், நாகர்ஜுனாவின் திருமண மண்டபமான அன்னபூர்ணா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.