சூரி நடித்த ‘மாமன்’ படம் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ்நாட்டில் மொத்த வசூல் ரூ. 50 கோடியை எட்டியுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த சூரி நேரில் பல்வேறு நகரங்களுக்குச் சென்றார்.
‘மாமன்’ படத்தின் ஓடிடி மற்றும் டிவி உரிமைகளை ஜீ5 பெற்றுள்ளது. தற்போது, ஒரே நேரத்தில் டிவி ஒளிபரப்பு மற்றும் ஓடிடிவெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான விளம்பரம் தொடங்கப்பட்டாலும், எப்போது வெளியிடப்படும் என்பதை ஜீ5 அறிவிக்கவில்லை.

தெலுங்கில் அதிக கவனம் பெற்ற ‘சங்ராந்திக்கி வஸ்துணாம்’ படத்தை ஜீ5 அதே பாணியில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ‘மாமன்’ படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ‘கருடன்’ படத்தையும் தயாரித்த குமார் தயாரித்துள்ளார். படத்தின் அனைத்து உரிமைகளும் வெளியாவதற்கு முன்பே விற்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.