சென்னை: பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என்று நிருபரின் கேள்விக்கு பதிலளித்து உள்ளார் நடிகை அதுல்யா ரவி.
நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் காதல் கண் கட்டுதே படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனபோது அவரது அழகிய லுக் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தது.
அதனால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு வந்தது. அதுல்யா தற்போது வைபவ் உடன் சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் பிரஸ் மீட் நடந்தபோது செய்தியாளர்கள் கேள்விக்கு வைபவ், அதுல்யா உள்ளிட்டோர் பதில் அளித்தனர்.
‘நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருப்பதாக இணையத்தில் கூறப்படுகிறதே. உண்மையா பொய்யா’ என ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்ப, அதுல்யா கொஞ்சம் சங்கடம் ஆக ரியாக்ட் செய்தார். பின்னர் ‘இல்லை.. நான் பண்ணல’ என அவர் பதில் கொடுத்தார்.