‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் ஒரு பாடலை பிரமாண்டமாக படமாக்கியிருந்தனர். இதில் ரஜினிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடனமாடுகிறார். தமன்னா ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி சில காட்சிகளில் நடித்திருந்தார். அவர் நடனமாடிய ‘கவாலா’ பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது பூஜா ஹெக்டே ‘கூலி’ படத்தில் நடனமாடியுள்ளார்.
இதுவும் பெரும் வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மார்ச் மாதத்துக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், அதற்குள் ரஜினி காட்சிகள் முடிந்துவிடும் என்றும், மற்ற காட்சிகள் ஏப்ரல் மாதம் முடியும் என்றும் சொல்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கூலி’.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம், தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுள்ளது. கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.