ஹைதராபாத்: இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் தி ராஜாசாப் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளி செல்லும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

பிரபாஸ் தற்போது இந்த படப்பிடிப்பை முடித்து ஹரி ராகவப்புடி இயக்கத்தில் ஒரு ரொமான்டிக் படத்திலும், பின்னர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் படத்திலும் நடிக்க உள்ளார். ஏற்கனவே மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நாயகிகளாக இணைந்த நிலையில், சமீபத்தில் ரிதி குமாரும் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
நிதி அகர்வால் இதற்கு முன் தமிழில் நடித்த ஈஸ்வரன் மற்றும் பூமி படங்கள் வெற்றி பெறாததால் அதிக வாய்ப்புகள் இல்லை. ஆனால் ஹரி ஹர வீர மல்லு படத்துக்குப் பிறகு, பிரபாஸுடன் இணைந்துள்ள இந்த படத்தின் மூலம் வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்.
தி ராஜாசாப் ஹாரர் படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போலவே மூன்று நாயகிகள் உள்ள ஹாரர் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இப்படம் திட்டமிட்டபடி டிசம்பரில் வெளியாகாமல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வந்தால், ஏற்கனவே வெளியாக உள்ள சூர்யாவின் கருப்பு, சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் சர்தார் 2 போன்ற படங்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் பான் இந்திய அளவிலும் ஜனநாயகன் படத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ் முன்னதாகவே சலார் படத்தின் மூலம் 700 கோடி வசூல் சாதித்துள்ளார். அதனால் தி ராஜாசாப் குறைந்தது 500 கோடி வசூலை அடையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து சலார் 2, ஸ்பிரிட், கல்கி 2 ஆகியவை வந்தால், பிரபாஸ் வசூல் கிங் என்பதை மறுபடியும் நிரூபிப்பார் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
திரைப்பட உலகில் பிரபாஸ் திருமணத்தைச் சேர்ந்த வதந்திகளும் பரவிக் கொண்டிருப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.