ஹைதராபாத்: விஷ்ணு மன்ச்சு நடிப்பில் தற்போது தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘கண்ணப்பா’. இதில் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற தோட்டா பிரசாத் இந்தப் படத்தின் எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார். 15 வருடங்களுக்கு முன் பிரபாஸ் நடித்த ஒரு படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய அவர், மீண்டும் பிரபாஸுடன் இணைந்து பணியாற்றுவது அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பிரபாஸ் தனக்கு செய்த ஒரு பெரிய உதவியை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். “2010-ம் ஆண்டு நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவச் செலவுக்காக எனக்குப் பெரும் தொகை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் வேறு யாரிடமும் உதவி கிடைக்காத நிலையில், பிரபாஸிடம் உதவி கேட்டு மெசேஜ் அனுப்பினேன்.
எனது மருத்துவ செலவு மற்றும் இதர உதவிகளுக்கு தேவையான பணத்தை உடனே அனுப்பி வைத்தார். மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவரது தந்தை இறந்துவிட்டார். “அந்த சோக நிகழ்வின் போதும் அப்பாவின் இறுதிக் காரியங்களை கவனித்துக் கொண்டிருந்தபோதும் என்னை மறக்காமல் மருத்துவ செலவுக்கான பணத்தை அனுப்பினார், கிடைத்ததா என்று கூட கேட்டார். அப்படிப்பட்ட நல்ல மனிதருடன் மீண்டும் பணியாற்றுவது எனது அதிர்ஷ்டம்” என்கிறார் தோட்ட பிரசாத்.