பிரபாஸ் தற்போது ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்து வருகிறார். இது மாருதி இயக்கும் ஒரு காதல் திகில் நகைச்சுவை படம். தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.

இதன் டீசர் வெளியீடு ஜூன் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்குள், இந்த படத்தின் காட்சிகளின் 20 வினாடி வீடியோ இணையத்தில் கசிந்தது. இதைத் தொடர்ந்து, படக்குழு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ‘தி ராஜா சாப்’ படத்தின் கசிந்த காட்சிகள் ஏதேனும் சமூக ஊடகங்களில் காணப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுப்போம். இந்த விஷயத்தில் அனைவரும் படக்குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று படக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.