சென்னை: பிரபு தேவா தன் இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் கோவிலுக்கு சென்று பக்தியுடன் கடவுளை வணங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடன இயக்குனரான சுந்தரம் அவர்களுக்கு ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத், பிரபு தேவா என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவருக்குமே நடனம் மற்றும் நடிப்பில் இருக்கும் திறமையால் 90களில் பல ரசிகர்களை கவர்ந்த்துள்ளனர். அதிலும் பிரபுதேவாவின் ரசிகர்கள் எண்ணற்ற அளவில் உள்ளனர். பிரபுதேவா இந்து, காதலன், லவ் பேர்ட்ஸ், காதலா காதலா, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம், இதயம், ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடனமாடி இருந்தாலும் அவர் கதாநாயகனாக நடித்திருந்த மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே பாடலுக்கு சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றார். டான்ஸ் மற்றும் நடிப்பை தொடர்ந்து போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.
கடைசியாக அவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த கோட் படத்தில் நெகடிவ் ரோலிலும் அசத்தியிருந்தார். பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத், இவர்களுக்கு இரு மகன்கள் அதில் முதல் மகன் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டான். அதன் பின் பிரபுதேவாநடிகை நயன்தாராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் பிரபுதேவா ரம்லத்தை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து டாக்டர் ஹிமான் சிங் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் பிரபு தேவா தன் இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் கோவிலுக்கு சென்று பக்தியுடன் கடவுளை வணங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.