பிரபுதேவாவும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் படம் ‘மூன் வாக்’. Behindwoods நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் என்எஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெட்டி கிங்க்சி, மலையாள நடிகர்கள் அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்காக ஒரு பாடல் காட்சி முழுவதுமாக கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் குழு, “படத்தின் உரையாடல் காட்சிகள் நிறைவடைந்துள்ளன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 5 பாடல்கள் உள்ளன. அவை அனைத்தும் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு பாடல் காட்சியை முழுக்க முழுக்க கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளோம். ஒரு கற்பனை உலகில் நடப்பது போல் உருவாக்கப்பட்ட பாடல் காட்சி ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கும்” என்று கூறியது. இந்த சூழ்நிலையில், ரோமியோ பிக்சர்ஸ் இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.