பிரபுதேவா, லட்சுமி மேனன், ஆர்.ஜே.பாலாஜி, தங்கர் பச்சான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘யங் மங் சங்’. இந்த படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன. “17-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. 1980-ல் நடக்கும் கதை. இந்தியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சீனாவுக்குச் சென்று, அங்கு புகழ்பெற்ற குங்ஃபூ கலையை கற்று, ‘யங் மங் சங்’ என்ற பெயரில் தமிழகம் திரும்புகின்றனர். இங்கே என்ன செய்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை” என படக்குழு கூறியுள்ளது. இப்படம் கோடையில் வெளியாக உள்ளது.