சென்னை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் 59வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடிய நிலையில், அவரது நண்பரும், சக நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா, ஒரு பிரைவேட் போட்டோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த போட்டோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரீத்தி ஜிந்தா, பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாவார். இவர் சன்னி தியோல், சைஃப் அலி கான், ரித்திக் ரோஷன், அமீர் கான், ஷாருக்கான் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிபெற்ற படங்களில் நடித்துள்ளார். அதே போல, சல்மான் கானுடன் பல படங்களில் கெமிஸ்ட்ரி அசத்தியுள்ளார். “ஹர் தில் ஜோ பியார் கரேகா”, “சோரி சோரி சுப்கே சுப்கே”, “ஹீரோஸ்”, “தில் நே ஜிசே அப்னா கஹா”, “ஜான்-இ-மான்” போன்ற படங்களில் ப்ரீத்தி மற்றும் சல்மான் ஜோடி அசத்தியுள்ளது. இவர்களின் கெமிஸ்ட்ரி திரையில் மாபெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், சல்மான் கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் விதமாக, ப்ரீத்தி ஜிந்தா, அவருடன் எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில், ப்ரீத்தி மற்றும் சல்மான் மேஜை மீது கால் வைத்து நெருக்கமாக போஸ் கொடுத்தனர். புகைப்படத்திற்கு “ஹேப்பி பர்த்டே சல்மான் கான், ஐ லவ் யூ தி மோஸ்ட்” என்று பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார் ப்ரீத்தி.
இந்த புகைப்படத்தை பார்த்த ஒருவரும், “நீங்கள் இருவரும் எப்போதாவது டேட்டிங் போய் இருக்கீங்களா?” என்று கேட்டார். இதற்கு ப்ரீத்தி பதிலளித்து, “இல்லவே இல்லை.. அவர் என் நெருங்கிய நண்பர் மற்றும் என் கணவரின் நண்பர்” என்று விளக்கினார்.
மேலும், ஒரு எக்ஸ் பயனாளர், பாலிவுட் காதல் குறித்து ப்ரீத்தியிடம் கருத்து கேட்டார். அதற்கு, “இன்றைய காலகட்டத்தில் பாலிவுட் ஒரு காதலை பார்க்க முடியவில்லை. நானும் நல்ல காதல் பற்றிதான் நினைக்கிறேன். ஆழமாக காதலிப்பவர்களிடமிருந்து நல்ல எழுத்து மற்றும் புதிய சிந்தனைகள் வெளிவரும் என்று நம்புகிறேன். உங்களைப் போலவே நான் காத்திருக்கிறேன்” என்ற பதிலை அளித்துள்ளார்.