சென்னை: நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரன், 45 வயதில் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு திருத்தணியில், தனது காதலியான இந்துவை நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் தந்தை கங்கை அமரன், அண்ணன் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தற்போது பிரேம்ஜி அப்பாவாகி விட்டதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஆனால், இதுவரை பிரேம்ஜி தனது சமூக வலைதள பக்கங்களில் இதுகுறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில் “செப்டம்பர் 4.44” என பதிவிட்டுள்ளார். இதுவே குழந்தை பிறந்த நேரமா என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
2003-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரேம்ஜி, 2005-ஆம் ஆண்டு “நியாபகம் வருதே” படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் பின்னர் நடிகராகவும் தனக்கென தனி இடம் பெற்றார். சென்னை 600028, மங்காத்தா, கோவா, சரோஜா, மாநாடு போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்தார்.
தற்போது பரவி வரும் இந்த தகவல் உண்மையா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.