பிரியா பிரகாஷ் வாரியர் 2017-ம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் ஒரு பாடலில் சில நொடிகள் மட்டுமே இடம் பெற்ற காட்சி மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். புருவங்களை உயர்த்தியவாறு கைகளை துப்பாக்கி போல காட்டி அவர் செய்த சைகை பல மாதங்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார்.
அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின்தொடர்ந்து, பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளியுள்ளனர். அதன் பிறகு, ரீல்கள் மற்றும் புகைப்படங்களுடன் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தார். இந்நிலையில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியானது. இதில் பிரியா பிரகாஷ் வாரியர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் சிம்ரனின் ஹிட் பாடலான ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு பிரியா பிரகாஷ் வாரியரும் நடனமாடினார். இதைத் தொடர்ந்து, சிம்ரனின் நடனத்தை சரியாக மறுஉருவாக்கம் செய்த பிரியா பிரகாஷ் வாரியரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். பலர் பாடலை கட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதன் மூலம் பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறார். ப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் தனது அனுபவத்தைப் பற்றியும், உடன் நடித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ஒரு மனதைத் தொடும் பதிவைப் பகிர்ந்துள்ளார்.