சென்னை: கிரிக்கெட் ஃபேண்டஸி கேம்களுக்காக புதிய சூப்பர் சிக்ஸ் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் வெளியீட்டு விழாவில் குட் பேட் அக்லி ஹீரோயின் பிரியா பிரகாஷ் வாரியர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், ஆப் இயக்குனர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த செயலியை அறிமுகம் செய்த நடிகை பிரியா வாரியர் கூறியதாவது:- நான் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன். நான் தொடர்ந்து ஐபிஎல் பார்ப்பேன், கேப்டன் கூல் தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும். சிஎஸ்கே எனக்கு மிகவும் பிடித்த அணி. இந்த பயன்பாடு மிகவும் எளிதாக விளையாட வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள் எளிதாக வெற்றி பெறலாம். இதன் மூலம் 30 லட்சம் வரை பரிசுத் தொகையை வெல்ல முடியும். சினிமா, கிரிக்கெட் இரண்டுமே நம் நாட்டின் இரு கண்கள்.