அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் நாடு முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா 2’ நேற்று வெளியாகி இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் குறித்த விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக இருப்பதால் படத்தின் வசூல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவு, சாட்டிலைட் மற்றும் இதர உரிமைகள் விற்பனையில் ‘புஷ்பா 2’ புதிய சாதனைகளைப் படைத்தது. அதில் முன்பதிவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், திரையரங்கு உரிமைக்கான விலை ரூ. 660 கோடி மற்றும் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைக்கு ரூ. 250 கோடி. இதனால் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடிஐ தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் 275 கோடி.
இந்நிலையில் ‘புஷ்பா 2’ படம் வெளியாகி 2 நாட்களில் வசூல் சாதனை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் இரண்டாம் நாளில் ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், ரூ. 405 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை எந்த படமும் இவ்வளவு பெரிய வசூல் சாதனை படைக்கவில்லை. இந்த மாபெரும் சாதனையை ‘புஷ்பா 2’ அடைந்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘புஷ்பா 2’ திரைப்படம் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.