ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார், “இந்தப் படத்தில் நடித்ததற்காக ராம் சரனுக்கு தேசிய விருது கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

அதில், “ராம் சரண் எனது சகோதரர் போன்றவர். அவருடன் பணியாற்றுவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை சிரஞ்சீவி சாருடன் பார்த்தேன். எனவே, எனது முதல் மதிப்பாய்வை வழங்க விரும்புகிறேன். முதல் பாதி நன்றாக இருந்தது, இடைவேளை, ‘பிளாக்பஸ்டர்’, ‘பிளாஷ்பேக்’ என்னை உற்சாகப்படுத்தியது. ஷங்கர் சாரின் ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை நான் மிகவும் ரசித்தேன். நான் இயக்கிய ‘ரங்கஸ்தலம்’ படத்துக்கு ராம் சரண் தேசிய விருது வாங்குவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ‘கேம் சேஞ்சர்’ படத்துக்காக அவருக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும்” என்றார்.