லண்டன்: கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். லண்டனை சேர்ந்த பெனடிக்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவர் லண்டனில் இருந்தாலும் மும்பையில் தங்கி படங்களில் நடித்து வந்தார். திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில், ராதிகா ஆப்தே மற்றும் பெனடிக்ட் சோகத்தில் இருந்தனர்.
இது குறித்து பேசிய ராதிகா ஆப்தே, ‘குழந்தைக்காக நாங்கள் செல்லாத கோவில்கள், தேவாலயங்கள், தர்காக்கள் எதுவும் இல்லை. நாம் பார்க்காத மருத்துவர்களே இல்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இது எங்களுக்கு பெரும் வேதனையாக உள்ளது’ என்றார். இந்நிலையில் அவர் கர்ப்பமானார்.
இதையடுத்து தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ராதிகா ஆப்தேவுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு குழந்தை பிறந்து ஒரு வாரமாகியும், தனக்கு பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்பதை வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த நடிகை ராதிகா ஆப்தேவின் தோழி சாரா ஆப்ஷன்ஸ், “மை பெஸ்ட் கேர்ள்ஸ்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.