பிக்பாஸ் மூலம் அறிமுகமான ரைசா வில்சன், அதன் பின்னர் மாடலிங் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடித்த “பியார் பிரேமா காதல்” திரைப்படம் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் பின்னர், அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.

இந்த சூழலில், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் வாய்ப்புகளை தேடி வந்தார். கடந்த ஆண்டு பேஷியல் சிகிச்சையின் போது அவரது முகம் வீங்கியதைக் காரணமாகக் கூறி, சிகிச்சை அளித்த மருத்துவர் பைரவிக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு பதிலளித்து அந்த மருத்துவர் ரைசாவுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இப்பிரச்சனை பின்னர் அமைதியாகத் தீர்ந்துவிட்டது.
தற்போது ரைசா கைவசம் பெரிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், மீண்டும் கிளாமர் வழியிலேயே திரும்பியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சியான உடையிலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.