
அன்சன் பால், ரெபா மோனிகா ஜான், ராஜா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மழையில் நனைகிறேன்’. டி. சுரேஷ் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் பி. ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார்.
கல்யாண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் டி.சுரேஷ் குமார் பேசுகையில், “இது காதல் கதை படம். ஏற்கனவே பல காதல் கதைகளை பார்த்திருந்தாலும் இது அவற்றிலிருந்து வித்தியாசமாக இருக்கும்.

படத்தின் கிளைமாக்ஸ் பேசும் காட்சியாக இருக்கும். நம்மிடம் உள்ளது. மழையில் தொடங்கி மழையில் முடிவடையும் படம். தயாரிப்பாளர், ரஜினி சாரின் நண்பர் என்பதால் இந்தப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்” என்றார்.