நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘கூலி’. மேலும் இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்ற ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நேற்று காலை சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் நடிகர் அஜித் குமாரிடம் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘வாழ்த்துக்கள்’ என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.