தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என ரஜினி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பின் இடைவேளையில் நெல்சன் ரஜினியிடம் ஒரு புதிய “ஒன் லைன்” கதையை கூறியதாக தகவல் பரவி வருகிறது. அந்தக் கதையை ரஜினி கேட்டு மிகவும் ரசித்துவிட்டாராம். உடனே “இது நம்ம அடுத்த படம் ஆகலாம்” என்று உற்சாகமாகக் கூறியதாகவும் வதந்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஜெயிலர் 2 படம் பெரிய வெற்றியடைந்தால், ரஜினி – நெல்சன் கூட்டணி மூன்றாவது முறையாகவும் இணையும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ரஜினி அடுத்ததாக கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருப்பது உறுதியாகிய நிலையில், அந்தப் படத்தை நெல்சனா அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறாரா என்பது குறித்த ஆர்வமும் அதிகரித்துள்ளது.