நடிகர் ரஜினிகாந்த், உதயநிதி மற்றும் விஜய்யை ‘அன்பு தம்பி’ என்று அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது 74-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் ‘கூலி’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அன்பு நண்பரான தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புத்தம்பி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தொடக்க வீரர் செல்வம், வைகோ, வி.கே. சசிகலா, திருநாவுக்கரசர், துரைமுருகன், அன்புமணி, டி.டி.வி. தினகரன், அண்ணாமலை, பிரேமலதா, திருமாவளவன், வாசன், ஏ.சி.சண்முகம், சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மத்திய, மாநில அரசியல் நண்பர்கள் அனைவரும் நன்றி.
திரையுலகினர் கமல்ஹாசன், வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், விஜயகுமார், சத்யராஜ், பாலகிருஷ்ணா, ஷாருக்கான், அமீர்கான், பார்த்திபன், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பல நடிகர், நடிகைகள், திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரையரங்கு உரிமையாளர்கள், ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியாளர்கள், கிரிக்கெட் வீரர்கள், அனைத்து விளையாட்டு வீரர்கள், அனைத்து தரப்பினரும் எனது நலம் விரும்பிகள் வாழ்க்கை, என்னை வாழ வைக்கும் கடவுள்கள் ரசிகர்கள், தமிழக மக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள். இவ்வாறு அவர் கூறினார்.