சென்னை: முன்னணி தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா இன்று (மார்ச் 8) லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் தனது முதல் சிம்பொனியை நிகழ்த்த உள்ளார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் முதல் கமல்ஹாசன் வரை அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கரங்கள் இன்று லண்டனில் சிம்பொனியை உருவாக்குகின்றன. இந்தியாவை பெருமை படுத்துகிறாய் சாமி! வாழ்த்துகள்.” #IncredibleIlaiyaraaja என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.
முன்னதாக, லண்டன் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த இளையராஜா, “சிம்பொனி கச்சேரி ரசிகர்களுக்கு சிறந்த இசை விருந்தாக அமையும். ரசிகர்களைப் போலவே நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிம்பொனி கச்சேரி நடத்துவது என் பெருமையல்ல; இது இந்த நாட்டின் பெருமை. இவரின் திறமையை ‘Incredible Ilaiyaraja’ என்றும் பாராட்டியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அதே வார்த்தையை ஹேஷ்டேக்காக பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.