சென்னை: மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள பான் இந்தியன் படமான ‘எம்புரான்’ படத்தின் டிரைலரை ரஜினிகாந்த் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டார். இமகஸ் பதிப்பில் இந்த டிரைலர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த், “என் அன்பு நண்பர் மோகன்லால் மற்றும் பிருத்விராஜின் “எம்புரான்” படத்தின் டிரைலரை பார்த்து ரசித்தேன், மிக அருமையான டிரைலர். படம் மாபெரும் வெற்றியடைய கடவுள் அருள் புரியட்டும், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்த டிரைலர் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. லூசிஃபர் படத்தின் கதையிலிருந்து தொடங்கி, இந்த டிரெய்லர் முழு அரசியல் சூழலையும், ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தையும் நோக்கி நம்மை இழுக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வத் சினிமாஸ் மற்றும் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் ஆகியவற்றின் கீழ் சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் இணைந்து தயாரித்துள்ளனர்.