சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனைத் தொடர்ந்து ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் நிலவுகிறது. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மோகன்லால், சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வரவுள்ளனர்.

இதற்கிடையில் ரஜினியின் அடுத்த படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினி – சுந்தர் சி இணையும் புதிய காம்போ உருவாகவுள்ளது என கூறப்படுகிறது. 1997-ஆம் ஆண்டு வெளியான ‘அருணாச்சலம்’ படம் இவர்களின் கடைசி கூட்டணியாக இருந்தது. இப்போது மீண்டும் அந்த வெற்றிக் கூட்டணி திரையுலகில் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகி, ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது சுந்தர் சி, நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கி வருகிறார். அதன்பின், ரஜினியுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்ட் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கத்தில் ரஜினியின் ரசிகர்களுக்கு பரிசாக அமைந்துள்ள நிலையில், மற்றொரு பக்கம் தமிழ் சினிமாவில் புதிய ரெக்கார்டுகளை எழுதும் வாய்ப்பும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், ரஜினி கமலுடன் இணைந்து நடிக்கவிருக்கும் படம் குறித்தும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் வரலாற்று சிறப்புமிக்க இணைப்பாக அமைவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு சூப்பர் ஸ்டார்களும் ஒரே திரையில் நடிப்பதால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
#