லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், ஆமீர் கான் மற்றும் பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணியாற்றுகின்றனர்.
படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தின் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலானது. வழக்கமாக யூடியூப்பில் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகளைப் பதிவேற்றும் சன் பிக்சர்ஸ், இந்த முறை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நேரடியாக வெளியிட முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 10 மணிக்கு சன் நெக்ஸ்ட் தளத்தில் இந்த நிகழ்வு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் இந்த நிகழ்வு ஒளிபரப்பப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.