
ஜெய்ப்பூர்: விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பை தொடர்ந்து தற்போது ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது. அங்கு ரஜினிகாந்த், அமீர்கான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சுமார் ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
ஜெய்ப்பூர் படப்பிடிப்பை தொடர்ந்து மீண்டும் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கூலி’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு மே 1-ம் தேதி ‘கூலி’யை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.