சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது “கூலி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பிறகு ரஜினி, நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர் 2” படத்தில் நடிக்க உள்ளார். இதுவரை இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராதது குறிப்பிடத்தக்கது.பாட்ஷா மற்றும் அண்ணாமலை போன்ற ரஜினி படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில், ரஜினி தன்னிடம் கதை கேட்டதாக கூறியுள்ளார்.
அவர், கார்த்திக் சுப்புராஜும் ரஜினிக்கு கதை சொல்லியுள்ளார். ரஜினி தற்போது பல படங்களை கைவசம் வைத்திருப்பதால், எதிர்காலத்தில் இதுகுறித்து நல்ல விஷயம் நடக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
அதற்குப் பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் இணைவார் என்பது இன்னும் தெரியவில்லை. மணிரத்னம், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் பெயர்கள் கூறப்பட்டாலும் இதுவரை உறுதியான தகவல் எதுவும் இல்லை.ரஜினி தொடர்ந்து பல கதைகளை கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.