சென்னை: ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியானதிலிருந்து, திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஓட்டத்தோடு இருக்கின்றன. ஆனால் வசூலைவிட அதிகம் பேசப்படுவது இணையத்தில் வைரலாகும் ட்ரோல்கள்தான். குறிப்பாக, கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்துக்கும் கூலி படத்துக்கும் பல சமானங்கள் உள்ளதாக ரசிகர்கள் வீடியோ எடிட்டு செய்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த ட்ரோல் வீடியோவில், விக்ரம் படத்தில் கமல் தனது மகனை இழக்கிறார், கூலி படத்தில் ரஜினி தனது நண்பனை இழக்கிறார் என கதையின் அடிப்படையில் ஒப்பீடு செய்யப்படுகிறது. இரண்டிலும் “அந்த மரணம் நடந்த பிறகு பழிவாங்கும் பயணம்” தான் கதையின் மையமாக இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

மேலும், இரு படங்களிலும் மலையாள நடிகர் ஒருவர் முக்கிய போலீஸ் வேடத்தில் நடிப்பதும், அவர்களின் ரகசிய மனைவியை வில்லன் கொல்வதும், வில்லனின் கடத்தல் தொழிலில் வித்தியாசம் (போதைப்பொருள்–மனித உறுப்புகள்) மட்டுமே இருப்பதும் நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“விக்ரமில் இடைவேளைக்கு பிறகு கதை துவங்குகிறது, கூலியில் இடைவேளைக்கு முன்னே கதை முடிந்துவிடுகிறது” என்று அந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார். க் ளைமாக்ஸ் பகுதியில் கூட ஒரே மாதிரியாக சண்டைக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இறுதியில் விக்ரமில் சூர்யா, கூலியில் ஆமிர் கான் என cameo ஹீரோக்களை பயன்படுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் “லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தைக ரஜினிக்கு சொல்லியிருப்பாரோ?” என சிரிப்புடன் கேலி செய்கின்றனர். சிலர் “ரஜினிக்கு புது கதை கேட்கவேண்டிய அவசியமில்லை போல, விக்ரமையே ரீமிக்ஸ் பண்ணிட்டாரே லோகி” என்றும் ட்வீட் செய்துள்ளனர்.
ஆனால் கூலி ரசிகர்கள், “விக்ரமோட template இருந்தாலும் ரஜினியின் screen presence தான் படத்தைக் காப்பாற்றுகிறது. அதுவே vintage ரஜினி” என ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கூலி படம் வசூலில் சாதனை படைத்தாலும், இணையத்தில் ஒப்பீடு மீம்ஸ்கள் ரசிகர்களுக்கு விருந்து போடுகிறது.