மும்பை விமான நிலையத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அணிந்திருந்த கழுத்து பேட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக விளங்கும் இவர் அணிந்திருந்த அந்த பேட்ச் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாக பரவி வருகின்றன. பலரும் அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது, எவ்வளவு விலை என்று ஆராய்ந்து வருகிறார்கள்.

ரகுல் ப்ரீத் சிங் கழுத்தில் அணிந்திருந்தது ஸ்டெம் செல் பேட்ச் எனத் தெரியவந்துள்ளது. உடலின் செல்களை புதுப்பிக்கவும், சேதமடைந்த திசுக்களை சரிசெய்யவும், உடலின் இயற்கை குணப்படுத்தும் சக்தியை மேம்படுத்தவும் இந்த பேட்ச்கள் உதவுகின்றன என்று கூறப்படுகிறது. மூட்டு வலி, தசை வலி போன்றவற்றை குறைக்கவும், தோல் பராமரிப்பிலும் இவை பயனுள்ளதாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிலர் இந்த பேட்ச்களை தோல் வயதானதை தடுக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாக நம்பப்படுகிறது. ஆனால் இதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து முழுமையான அறிவியல் ஆதாரங்கள் இன்னும் ஆராய்ச்சியில் உள்ளதால், பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஸ்டெம் செல் பேட்ச்களின் விலை இந்தியாவில் 30 பேட்ச்கள் கொண்ட ஒரு பேக் கிட்டத்தட்ட ரூ.13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் ரகுல் ப்ரீத் சிங் எந்த காரணத்திற்காக இந்த பேட்சை பயன்படுத்தினார் என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், அது ஆரோக்கியம் அல்லது தோல் பராமரிப்பு காரணமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.