80களின் பிற்பகுதியிலும் 90களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் இணைந்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் எடுத்து கோடீஸ்வரரான தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்களின் தோல்வியால் மார்க்கெட் இழந்தார்.
அதன்பிறகு அதிமுகவில் தீவிரமாக பணியாற்றிய அவர், பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார். தற்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன் குணச்சித்திர வேடங்கள் வந்தபோதும் நடிக்க மறுத்துவிட்டார். நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் என்று உறுதியாக இருந்த அவர், மேதைக்கு பிறகு தற்போது சாமன்யன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தனது திரையுலக வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில் விஜயகாந்துடன் சேர்ந்து பூ மழை பொழியுது என்ற படத்தில் நடிக்கச் சொன்னார்கள். ஆனால் இரண்டாவது ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். ராமராஜன் இதுவரை எந்த ஹீரோவுடன் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.