‘பிரம்மாஸ்திரா’ 2-ம் பாகம் குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது, பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘பிரம்மாஸ்திரா 2’ குறித்த கேள்விக்கு ரன்பீர் கபூர் பதிலளித்துள்ளார். அதில், “பிரம்மாஸ்திரம் என்பது அயன் முகர்ஜி நீண்ட நாட்களாக கனவு கண்டு வரும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியும்.
தற்போது ‘வார் 2’ படத்தில் நடித்து வருகிறார். அது வெளியானதும், ‘பிரம்மாஸ்திரா 2’ படத்தின் வேலைகளைத் தொடங்குவார். படம் கண்டிப்பாக நடக்கும். இன்னும் படத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால் ‘பிரம்மாஸ்திரா 2’ கண்டிப்பாக நடக்கும். விரைவில் இதுகுறித்த சில அறிவிப்புகள் வெளியாகும்,” என்றார்.

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, ஷாருக்கான் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பிரம்மாஸ்திரா’. கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி மற்றும் பலர் தயாரித்த இந்தப் படம் 4 வருடங்கள் படமாக்கப்பட்டது. பிரம்மாண்டமாக சுமார் ரூ. 410 கோடி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.