ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்த ‘ஜாவா’ நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியில் கவனம் செலுத்தி வரும் அவர், முதன்முறையாக திகில் படத்தில் நடிக்கிறார்.
ஆதித்யா சர்போதர் இயக்கிய இதில் ஆயுஷ்மான் குரானா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பரேஷ் ராவல் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ‘தாமா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தயாரிக்கிறது, ஸ்த்ரீ, ஸ்த்ரீ 2 உள்ளிட்ட திகில் படங்களைத் தயாரித்த மேட்கேப் நிறுவனம். படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ராஷ்மிகா, இன்னும் சில நாட்கள் இரவு படப்பிடிப்பு நடக்கும் என்று கூறியுள்ளார்.