‘புஷ்பா 2’ திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தன்னா நடித்ததன் பிறகு, அவர் வாங்கும் சம்பளத்தைப் பற்றி ரசிகர்கள் கேள்விகள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அந்தப் படம் உலகளவில் ரூ.1800 கோடி வரை வசூலித்தும், ரஷ்மிகா அதன் பின் வந்த படங்களில் ஏன் குறைவான சம்பளத்துக்கே ஒப்புக்கொள்கிறார் என்பதே இப்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

‘குபேரா’ திரைப்படத்தில் சமீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஷ்மிகா, அதற்காக ரூ.4 கோடி மட்டுமே சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இது ‘புஷ்பா 2’-ல் அவர் பெற்ற ரூ.10 கோடியுடன் ஒப்பிட்டால், இது இரு மடங்கு குறைவான தொகை. அதற்குமுன் ‘சாவா’ என்ற திரைப்படத்திலும் அவர் ரூ.4 கோடி சம்பளத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றிபெற்றதுடன், அவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.
அதேபோல், சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ திரைப்படத்திற்காக அவர் ரூ.5 கோடி சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடித்த படம். ஆனால், இந்த படங்களின் வெற்றியும், அவரின் மார்க்கெட்டையும் பொருத்துக் கொண்டால், அவர் அதிக சம்பளத்துக்கு தகுதியானவர் என்பதே ரசிகர்களின் கருத்து.
பொதுவாக ஒரு நடிகை, வெற்றி பெற்ற படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை உயர்த்துவதே சாதாரணம். ஆனால், ரஷ்மிகா அந்த வழக்கை முறியடித்திருக்கிறார். ரசிகர்கள் அதற்கான காரணம் என்ன என்று வியப்புடன் கேட்டு வருகின்றனர். சிலர், “ரஷ்மிகா சிறந்த கதைகளுக்காகவே குறைந்த சம்பளத்தில் நடிக்க சம்மதிக்கிறார்” என பாராட்டி வருகின்றனர். மற்றவர்களோ, “ராசியான ஹீரோயின் என்ற பட்டத்தை வைத்திருக்கும் நடிகையை இந்த அளவுக்கு மட்டும் மதிப்பீடு செய்யலாமா?” என கேள்வி எழுப்புகிறார்கள்.