சென்னை: தனுஷ், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடித்த ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப் படம் 2013-ம் ஆண்டு தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இப்போது அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் ஆகஸ்ட் 1-ம் தேதி நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியிடுகிறது.

ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் கதையைச் சொல்லும் இந்தப் படம், புதிய கிளைமாக்ஸ் காட்சி மற்றும் நவீன அட்மோஸ் ஒலி வடிவமைப்புடன் 4K தரத்தில் வெளியிடப்பட உள்ளது.
ராஞ்சனா படம் இந்தியில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. முன்னதாக, அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படத்தையும் அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் மீண்டும் வெளியிட்டது. இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி தனுஷின் பிறந்தநாளில் மீண்டும் வெளியிடப்படுகிறது.