சென்னை : நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கிளிம்ப்ஸ் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்
நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றர். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. ரெட்ரோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இப்படத்தில் இருந்து வெளியாகும் பாடல்களும் இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இந்த விழா தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.