ரஜினியின் ‘கூலி’ ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் வெளியீட்டு தேதி இறுதி செய்யப்படவில்லை. தற்போது ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் மூலம் படத்தின் விளம்பரப் பணிகளை படக்குழு தொடங்கவுள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாகீர், உபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.